இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழுவின் நியமனம், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் யாப்பிற்கு முரணானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
பார்படோசில் நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தின் போதே சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் சுதந்திரமானதும் நீதியானதுமான கிரிக்கெட் தேர்வை நடத்துமாறு இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சர்வதேச கிரிக்கெட் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 20-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்பிரகாரம், NO BALL க்காக FREE HIT சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின்போது 15 ஆவது ஓவரில் இருந்து 40 ஆவது ஓவர் வரை POWER PLAY வாய்ப்பைப்
பெற்றுக்கொள்ள முடியும் என்ற விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் ஜூலை மாதம் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.