துனீஷியாவில் உள்ள சுஸ் நகரில், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஒரு விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 37 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
கொல்லப்பட்டவர்களில் பிரிட்டன், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்களும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்திய ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. ஆனால், அந்த நபர் மட்டும்தான் தாக்குதல் நடத்தினாரா என்பது தெளிவாகவில்லை.
துனீசியாவில் சுஸ் நகரம் சுற்றுலாப் பயணிகள் பெரிய அளவில் வருகைதரும் நகரமாகும்.
துனீஷியாவின் தலைநகரான துனிசில் கடந்த மார்ச் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாப் பயணிகள். இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.