எதிர்வரும் பொது தேர்தலை இலக்கு வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். இச்சந்திப்பு வெற்றியுடன் நிறைவடைந்ததாக ஆறு பேர் கொண்ட குழுவின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த 19ஆம் திகதி இக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இதன் போது முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக குறித்த சந்திப்பின் பின்னர் ஆறு பேர் கொண்ட உறுப்பினர்கள் ஊடகத்திடம் குறிப்பிட்டிருந்தார்கள்.
சமீபத்தில் ஜனாதிபதி தலைமைத்துவத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதையை ஜனாதிபதியை இணைக்கும் முயற்சியில் 06 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
W.J.ஜே.செனவிரத்ன தலைமை தாங்கும் இக்குழுவில் சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, குமார் வெல்கம, டிலான் பெரேரா மற்றும் டீ.பீஏக்கநாயக்க ஆகியோர் உள்ளடங்குவார்கள்.