அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மைத்திரி, மகிந்தவை ஐக்கியப்படுத்தும் குழுவிற்கு அறிவித்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் உறுதிப்படுத்தி கூறிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி கூறியதாக தான் கடந்த வாரம் வெளியிட்ட தகவல் தொடர்பில் சிலர் பல்வேறு ஊடக சந்திப்புகளை நடத்தி தான் கூறியது பொய் எனக் கூறினாலும் பின்னர் தான் கூறியது பொய்யா அல்லது அந்த குழு கூறியது பொய்யா என்பதை அறிய முடிந்தது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுத் தேர்தலில் என்ன நடக்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்ததாகவும் அரசியலில் அனுபவமுள்ள தனக்கு எதனையும் எதிர்கொள்ள முடியும எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன, பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.