எதிர்க்கட்சித் தலைவர் யார் ?

நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் நேற்று நாடாளுமன்றில் இதனை அறிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவினால் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி தலைவராக ஏற்றுக்கொண்டதனை தொடர்ந்து சபாநாயகரால் அறிவிக்கப்பட்டதாக பிரதிசபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அநுர குமார திஸாநாயக்கவின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பிரதி சபாநாயகர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அதற்கு பதிலளித்த அநுர குமார திஸாநாயக்க, 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளர் மாத்திரம் அதற்கு தனியாக தீர்மானிக்க முடியாதெனவும், எதிர்க்கட்சியின் ஏனையோரும் இது தொடர்பில் விசாரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

சபாநாயகரின் முடிவினை யாராலும் ஆராய முடியாதென மீண்டும் ஒரு முறை பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். 

எப்படியிருப்பினும், தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பிரச்சினை நாடாளுமன்றில் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.