விதவைகள் மற்றும் அநாதைகளுக்கு மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு !

பழுலுல்லாஹ் பர்ஹான்
ஸ்ரீலங்கா ஹிறா  பௌண்டேஷன் நிறுவனமும் லன்டன் பத்மா ஒஸ்மான் பௌண்டடேனும் இணைந்து புதிய காத்தான்குடி அப்ரார் நகர் பிரதேசத்திலுள்ள விதவைகள் மற்றும் அநாதைகளுக்கு மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
மேற்படி விதவைகள் மற்றும் அநாதைகளுக்கு மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு புதிய காத்தான்குடி அப்ரார் பள்ளிவாயல் முன்றலில் 25-நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
அப்ரார் பள்ளிவாயல் செயலாளர் எம்.எஸ்.எம்.றாஸிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா  பௌண்டேஷன் நிறுவனத்தின்; பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  கலந்து கொண்டு புதிய காத்தான்குடி அப்ரார் நகர் பிரதேசத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 20 விதவைகள் மற்றும் அநாதைகளுக்கு 7500.00 ரூபா வீதம் பணத்தை கையளித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை  உறுப்பினர் பரீட்,பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் சிரேஷ்ட புதல்வர் ஹிறாஸ் அஹமட், ஸ்ரீலங்கா ஹிறா  பௌண்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளர்கள் உட்பட அப்ரார் பள்ளிவாயல் நிருவாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
3-DSC05363_Fotor 2-DSC05404_Fotor 6-DSC05398_Fotor 8-DSC05376_Fotor