கனடாவில் உள்ள மலைத்தொடர் ஒன்றில் மனித முகம்போல் காட்சியளிக்கும் கற்பாறை !

29E98A6800000578-3136985-image-m-43_1435114262916

கனடாவில் உள்ள மலைத்தொடர் ஒன்றில் மனித முகம்போல் காட்சியளிக்கும் கற்பாறையொன்று உள்ளது.

இதனை Hank Gus என்னும் நபர் கவனித்துள்ளார். அவர் விமானத்தில் பயணித்தவேளை கீழ் உள்ள அழகான மலைத்தொடர்களை புகைப்படம் எடுத்துள்ளார்.

பின்னர் அந்த புகைப்படங்களில் மனிதனுடைய முகம் இருப்பது போன்று ஒரு பெரும் பாறை இருப்பதை அவர் அவதானித்துள்ளார்.

இருப்பினும், அந்த மலை எங்கே உள்ளது என்று அவருக்குத் தெரியாது. கடந்த 2 வருடங்களாக தேடி அலைந்த Hank Gus , இறுதியாக அந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

பின்னர் வாடகைக்கு ஒரு சிறிய விமானத்தை அமர்த்தி அதன் அருகே சென்று புகைப்படம் எடுத்துள்ளார்.

இதுவரை எவரும் இந்த மலையின் குறித்த பகுதியை புகைப்படம் எடுத்ததே இல்லையென்கிறார்கள்.

இந்த மனித முகத்தோற்றம் இயற்கையிலேயே அமையப் பெற்றதா அல்லது செயற்கையாக அமைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

29E98A6400000578-3136985-Tip_Gus_above_heard_about_it_from_someone_who_had_learned_of_a_k-m-44_1435114315576