அமைச்சரவையில் தமது குரல் அடக்கப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்சவை விரட்டும் அவசரத்தில் அதை விடப்பெரிய சிக்கலில் தாம் மாட்டிக்கொண்டுள்ளதாக உணர்வதாக நேற்றைய தினம் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன,
ரவுப் ஹக்கீம் இறுதி நேரத்தில் இனி அந்தப் பக்கம் இருந்து ஒன்றும் செய்ய முடியாது எனும் நிலையில், முஸ்லிம் சமூகத்தில் நிலவிய மைத்ரி அலையின் நிர்ப்பந்த்தில் வந்தவர்.
இறுதியில் வந்து இணைந்தவர் என்ற ரீதியில் அவருக்கு அமைச்சரவையின் நல்லதை விட மஹிந்த ராஜபக்சவின் நல்லது தெரிகிறது போன்றும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.