யாப்பை மீறி தேர்தல் முறையை சட்டத்தின் ஊடாக ஏகாதிபத்திய சுயரூபத்தை உருவாக்காவே எத்தணிக்கின்றார்கள் : ஹக்கீம் !

hqdefault

 தேர்தல் திருத்தம் தொடர்பான ஒத்திவைப்ப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் 24.06.2015 புதன்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எங்களது கருத்துக்கள் சிலவற்றை இங்கு முன்வைக்கக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நேற்று இந்தச் சபையில் அரசியலலமைப்பின் 20ஆவது திருத்தம் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றபோது வெளிநாட்டமைச்சர் இந்நாட்டில் ஜனநாயகத்திற்கு இடமளிக்கப்படும் போது முன்னர் ஆயுதம் தாங்கிய குழுக்களின் செயற்பாடுகள் பற்றி அவர் கூறினார். தெற்காசியாவில் ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் பாரிய குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜனாதிபதியும் அதற்கு கண்டம் தெரிவித்திருந்தார். முன்னர் எங்களது பாராளுமன்றத்திலும் குண்டு வெடிப்பு நடந்திருக்கின்றது.

இந்தப்பின்னணியில் நேற்று இந்தச் சபையில் உரையாற்றியவர்களின் பேச்சிலிருந்து சிலவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் சிரேஷ்ட அரசியல்வாதி சம்பந்தன் பேசும் போது, தேர்தல் ஒன்று நெருங்கும் போது சில கட்சிகளின் சுயநல நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு தேர்தல் சட்டத்திருத்தம் செய்ய முற்படுவதையிட்டு அவர் எச்சரித்தார். அதிலிருந்து விடுபட்டு இதுபற்றி ஆழமாக ஆராய்வதற்காக காலம் நேரம் தேவை என்றும் அவர் கூறினார்.

அதுமட்டுமல்ல, மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திசாநாயக்க உரையாற்றும் போதும், இந்த உத்தேச தேர்தல் திருத்தத்தின் ஊடாக தமது கட்சிக்கு ஏற்படப்போகும் பாரிய பாதிப்பைப் பற்றி குறிப்பிட்டு வைராக்கியத்தோடும், ஆணவத்தோடும் இந்த நாட்டை மீண்டும் அதலபாதாளத்திற்கு இட்டுச் செல்லும் செயல்பாட்டுக்கு இடமளிக்க வேண்டாம் என்று தெளிவாகக் கூறினார்.

இந்த புதிய தேர்தல் திருத்தம் பற்றி கடந்த சில மாதங்களாக நாங்கள் பேசி வருகிறோம். இந்த ஒரு முக்கிய காரணத்தைக் கூறவேண்டும், என்னை இலக்கு வைத்து சேறுபூசும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. ஜோன் செனவிரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால சில்வா ஆகியோரின் பேச்சுக்களிலும் மிகவும் துவேசத்துடன் என்னை குறிவைத்து தாக்கியதை நான் நன்றாக புரிந்து கொண்டேன்.

அமைச்சரவைக் கூட்டங்களிலும் இதுதான் நடந்தது. ஜனாதிபதி மிகவும் அமைதியாக, நியாயபூர்வமாக எனது கருத்துக்களை செவிமடுப்பதுண்டு. அத்துடன் தாம் ஒருபோதும் சிறுபான்மைச் சமூகங்களுக்கும், சிறிய கட்சிகளுக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப் போவதில்லையென்று என்னிடம் எப்போதும் கூறிவந்த போதிலும். எங்களது தர்க்கம் குறித்தும் அதன் யதார்த்தம் குறித்தும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை.

இந்த உத்தேச தேர்தல் திருத்தம் சம்பந்தமாக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதற்கு நானும் நியமிக்கப்பட்டேன். ஆனால் அதில் முதன்முறையாக கலந்து கொண்டபோதே, அதை வழிநடத்துவது வேறொரு கும்பல் என்று புரிந்து கொண்டேன். அதுபற்றி அநுரகுமார திசாநாயக்க அவர்களும் குறிப்பிட்டார். அதனை குசினி (சமையலறை) கூட்டம் என்று அவர் சொன்னார்.

இதுபற்றி விகாரைகளிலும், சமயவழிபாட்டுத் தலங்களிலும் வேறிடங்களிலும் பரவலாக பேசப்பட வேண்டும். பரந்த கருத்துப் பரிமாற்றம் இடம்பெற வேண்டும். அவற்றைப் புறந்தள்ளி நடந்து கொள்வது தவறாகும். சுpல தினங்களுக்கு முன் நான் சிறுபான்மையின மற்றும் சிறு கட்சிகளின் தலைவர்களுடன் மாதுலுவாவே சோபித்த தேரரை சந்தித்து அவரிடம் எங்களது அபிப்பிராயங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்தோம். அவர் அவற்றை ஏற்றுக் கொண்டார். இவ்வாறன ஒரு தேர்தல் முறையை முன்வைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அவர் கூறினார்.

ஏப்ரல் 23ஆம் திகதி கால எல்லை கடந்து மாதங்கள் தாண்டி விட்டன. இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம் பாராளுமன்றத்தைக் கலைப்பதுதான் என்று அவர் தெரிவித்தார். இப்படி நாங்கள் கூறும்போது எதிர்க்கட்சி தலைவர் உட்பட அவரது கட்சியினர் கூறுவது என்னவென்றால், நான் பிரதமரின் கையாள் என்பதாகும். இது பூனையைப் பாவித்து பலாக் கொட்டை உறிக்கும் வேலையாகும். இவ்வாறுதான் என்னை குற்றம்சாட்டுகின்றனர். சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் பற்றி அவர் பேசினாலும் அவர் சார்ந்த கட்சியின் நிலைமையைதான் அவர் சிந்திக்கின்றார். பிரதான கட்சிகள் இரண்டினதும் ஆதிக்கம் நோக்கிச் செல்லும் பயணத்தில் யாப்பை மீறி தேர்தல் முறையை சட்டத்தின் ஊடாக ஏகாதிபத்திய சுயரூபத்தை உருவாக்காவே எத்தணிக்கின்றார்கள் என்பதை நான் மிகத் தெளிவாக கூறவிரும்புகின்றோன்.

தெற்கில் பரவி வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் மற்றும் வடக்கில் சிங்கள முஸ்லிம் மக்களுக்கும் இந்த தேர்தல் முறையினால் நியாயம் கிடைக்குமென்பது மிகவும் கஷ்டமானதாகும்.
மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள், பழமை வாய்ந்த இடதுசாரிக் கட்சியான சமசமாஜக் கட்சி போன்றவையும் பாரிய பாதிப்பை எதிர் நோக்குகின்றன. சமசமாஜக் கட்சியின் தலைமையும் மாதுலவாவே சோபித்த தேரரிடம் நிலைமையை விளங்கப்படுத்தினார். டீ.யு குணசேகரவுடன் பேசக் கிடைக்கவில்லை அவரும் எங்களது நிலைப்பாட்டில் இருப்பதாக நம்புகிறேன். வாசுதேவ நாணயக்காரர் போன்றவர்களும் கதைக்கிறார்கள். ஏமாற்றும் விதமாக வீணாக கற்பனை செய்து புரளியைக் கிளப்புகிறார்கள்.

சில இலத்திரனியல் ஊடகங்களை கூலிக்கும், குத்தகைக்கும் எடுத்து 20ஆவது திருத்தத்தில் எங்களது அபிப்பிராயத்தை மட்டந்தட்டி பிரசாரங்களை முன்னெடுப்பதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அச்சு ஊடகங்கள் அவ்வாறல்ல. இலத்திரனியல் ஊடகங்களை நான் குறிப்பிட்டு சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அவற்றிற்கு என்னென்ன வெகுமதிகள் வழங்கப்படுகின்றவோ எனக்குத் தெரியாது.

எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது என்னை குறிப்பிட்டுக் காட்டித் தான் பேசினார் ஏனென்றால் அவர் என்னை நோக்கிவாறுதான் அடுக்கிக் கொண்டு போனார். இன, மத, குல பேதங்கள் எனக்குறிப்பிட்டு அடுக்கிக் கொண்டே போனார். அவரது பேச்சிலிருந்து அவர் எந்த திக்கை நோக்கி செல்கின்றது என தெளிவாகத் தெரிந்தது.

நாங்கள் குறிப்பிடும் திருத்தங்களை ஏற்றுக் கொண்டால் இது பிரச்சினையாகப் போவதில்லை. எங்களது திருத்தங்கள் பற்றி கலந்தாலோசிக்கக் கூட இடமளிக்கிறார்களில்லை. ஆதரவாக விதண்டா வாதம் பேசிய கண்காணிப்புக் குழுவினர் கூட இப்பொழுது எங்களது பக்க நியாயங்களை புரிந்து கொண்டிருக்கின்றார்கள். வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்த முறை பற்றியும் நான் கதைக்க வேண்டும். அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி நான் கதைக்க விரும்பவில்லை. அமைச்சரவையில் நான் வாக்குவாகதப்பட்ட விதத்தை இங்கு கூறவேண்டிய அவசியமில்லை. அமைச்சரவையின் தீர்மானத்திற்குப் பிறகு நான் பிரதமரைச் சந்தித்து தயவு செய்து சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் குறைந்த பட்சம் அவருடன் சேர்ந்து போட்டியிட்ட கட்சிகளையாவது வர்த்தமானி பிரசுரிக்க முன்னர் கலந்தாலோசித்து தீர்மானியுங்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இரவோடு இரவாக வர்த்தமானியில் பிரசுரித்து விட்டார்கள். அதற்காக நாங்கள் கவலைப்படுகிறோம். அவ்வாறான முறை தவறானது. நீண்டகாலமாக கதைத்து வந்த திருத்தம், அநுரகுமார திசாநாயக்க கூறியது போன்று குசினி கூட்டத்தால் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி சிறுபான்மைக் கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது எனக் கூறி விட்டு இப்போது என்ன நடந்திருக்கின்றது. அவரை நாங்கள் குற்றம் சுமத்தவில்லை. குசினிக் கூட்டத்தினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

கட்சிகளின் உட்பூசல் பற்றி நான் பேசவிரும்பவில்லை. எங்கள் கட்சியிலும் உட்பூசல் இல்லாமல் இல்லை. எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை அது தீவிரமாக இருக்கிறது.  உள்முரண்பாடுகளகு;கு தீர்வாக தேர்தல் திருத்தத்தை திணிக்க முடியாது.

இரண்டு விதமான தேர்தல் முறைகள் உள்ளன. கலப்பும் முறையினுடனான விகிதாசார திட்டம் பற்றி பேசப்படுகிறது. ஏனைய சில நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த முறையிலுள்ள நன்மைகள் பற்றி நாங்கள் பேசிகிறோம். தாய்லாந்து, நியூசிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளில் உள்ள தேர்தல் முறையைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.

வாக்களார்களுக்கு இரட்டை வாக்குச் சீட்டு வழங்குவது சிறிய கட்சிகள், சிறுபான்மையினக் கட்சிகள், சிறிய கொள்கை வாதக் குழுக்களுக்கு பெரிதும் நன்மை பயப்பதாகும். எங்களது கோரிக்கையை வாக்காளர்கள் புறக்கணிப்பார்களானால் பரவாயில்லை. ஆனால், எங்களது கருத்தை பாராளுமன்றத்திற்குள் தெரிவிப்பதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்து விடாதீர்கள்.
அமைச்சரவை உபகுழுவுக்கு பாராளுமன்றத்தின் உள்ளும், புறமும் உள்ள கட்சிகள் ஆலோசணைகளை தெரிவிக்குமாறு கோரப்பட்டது ஆலோசணைகள் அனுப்பப்பட்டன. ஆனால், அவ்வாறு தெரிவிக்கப்பட்ட யோசனைகள் மீது எந்தவிதமான கவனமும் செலுத்தப்படவில்லை. அழைக்கவுமில்லை, கதைக்கவுமில்லை. ஓரிரு நாட்களில் காரியத்தை முடித்துவிட்டார்கள். பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலுக்குச் செல்லவே அவசரப்பட்டார்கள். சுயநல நோக்கத்திற்காக தங்களுக்கு வேண்டியவற்றை செய்து கொண்டார்கள். நாங்கள் அதுபற்றி சுட்டிக்காட்டிய போது அவர்களின் உத்தேச தேர்தல் திருத்தத்திற்கு நாங்கள் முன்வைத்த யோசனைகள் ஒத்துப்போகின்றதா இல்லையா என்பதைத் தான் பார்த்தார்கள். ஒத்துக்போகாவிட்டால் தூரத் தள்ளினார்கள். இந்தச் செயல்பாட்டுக்கு நாங்கள் இணங்க முடியாது.
எனது அமைச்சரவை சகாக்கள் எனக்கு பேசவே இடமளிக்கவில்லை. அவர்களது பெயர்களை இங்கு குறிப்பிட நான் விரும்பவில்லை. அவர்களைப் பற்றி அநுரகுமார திசாநாயக்க நேற்று தெளிவாகச் சொன்னார்.

சிறிய கொள்கைச் சார்புக் கட்சியென்று கூறிக்கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொங்கிக் கொண்டு ஜனாதிபதிக் கதிரையில் அமர்வதற்கு ஆசைப்படுபவர்கள் இருக்கின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் கவனமாக இருங்கள்.

அந்தக் கூட்டம் ஜனாதிபதிக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலுள்ள முறுகலை தீர்ப்பதற்கும் முற்படுவதாகக் கேள்விப்படுகிறோம். முன்னாள் ஜனாதிபதியை அவர்கள் இப்பொழுது நல்லவர் என கூறுவதாகவும் அறியவருகிறது.

முன்னாள் ஜனாதிபதியோடு எனக்கு கருத்து வேற்றுமை இருந்தது. நாங்கள் அவ்வப்பொழுது காரசாரமாக வாக்குவாதப்பட்டோம். ஆனால் பேசக்கூடியதாக இருந்தது. இப்பொழுது அமைச்சரவையில் பேசுபவர் ஜனாதிபதியல்ல வேறு அமைச்சர்கள். ஜனாதிபதிக் கதிரைகை;கு குறிவைத்திருப்பவர்கள். கட்சியில் நிலவும் உட்பூசலை பயன்படுத்தி இப்பொழுது ஜனாதிபதிக் கதிரைக்கு கண் வைத்திருப்பவர்கள் வேறு நபர்கள். இந்த ஆபத்திலிருந்து தயவு செய்து உங்களது கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

முன்னாள் ஜனாதிபதியை அகற்றப் போய் இப்பொழுது நாங்கள் வேறு ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கின்றோம். கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த தேர்தல் சட்டம் முற்றிலும் கலப்படம் செய்யப்பட்டது. புரிந்து கொள்ள முடியாதது. வாக்காளர்களுக்கு மட்டுமல்ல, சட்ட வல்லுநர்களுக்கே புதிரானது.