கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஏற்பாட்டிலான வருடாந்த இப்தார் நிகழ்வு எதிர்வரும் ஜுலை 1 ஆம் திகதி புதன்கிழமை வெள்ளவத்தை மெரைன்ட் டிரைவிலுள்ள மெரைன்ட் கிரேன்ட் வரவேற்பு மண்டபத்தில் பி.ப 5.00 மணியிலிருந்து இடம்பெறவுள்ளது.
தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக இடம்பெறும் இந்த இப்தாரில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம். டுலிப் நவாஸ் சிறப்புரையாற்றவுள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களை இந்த இப்தாரில் கலந்துகொள்ளுமாறு பாடசாலையின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் பழைய மாணவர்கள் முன் கூடியே தங்களது பெயர்களை SMS மூலம் 0772987367 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளுதல் ஏற்பாடுகளுக்கு வசதியாக அமையும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 0772987367 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் பொதுச் செயலாளர் தௌபீக் எம். கானை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.