முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்தில் இன்று ஒவ்வொரு நாளும் வேலையற்ற பட்டதாரிகள், தொண்டர் ஆசிரியர்கள், வெளிமாகாணத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், வெளிமாவட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதிக்கான தொழில் வழங்கப்படாதோர் என்று ஒவ்வொரு நாளும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் 1,990 ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் தொடர்பான விவரத்தை பெற்றுக்கொண்டிருக்கிறோம்.
கடந்த ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர்களை வெளிமாகாணங்களுக்கு நியமனம் வழங்கி அனுப்பிவைத்தமை போன்ற விடையங்களை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கண்டும் காணாதது போலிருந்துள்ளார்.
இது சிறுபான்மைச் சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகமாகும். அவர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாம் இம்முறை வழங்கப்படவுள்ள தொண்டர் ஆசிரியர் நியமனங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் புறக்கணிக்கப்பட்ட 110 பேருக்கேயாகும்’ என்றார்.
‘கிழக்கில் ஆசிரியர் பதவி வெற்றிடம் எதுவும் இல்லை என்று சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறிவருகின்றார். இதில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பதை இன்னும் 2 வாரங்களில் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்றும் அதற்காக சகல ஆதாரங்களை திரட்டி எடுத்துள்ளேன் என்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.