20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக செயற்பட்டால் ஹக்கீமை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் !

Nimal-Siripala-De-Silva_22

அமைச்சரவையில் ஏகமனதாக இணக்கம் தெரிவிக்கபட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக செயற்படுவதாயின் ரவூப் ஹக்கீமை அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என எதிர் கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

இது முழு அமைச்சரவையும் அனுமதித்த ஒரு விடயம். ஆகவே இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தற்போது ரவூப் ஹக்கீமால் கூற முடியாது. அவ்வாறெனில் அவர் அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும். இந்த விவாதத்தை முன்னெடுப்பது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க அரசியல் செயற்பாடொன்றை முன்னெடுக்கின்றமை தெரிகின்றது. இந்த விவாதம் உண்மையாக முன்னெடுக்க போவதில்லை. 20 ஐ தோல்வியடைய செய்வோம் என ரணில் கூறியதாக அநுர கூறிகினார். இரசியங்கள் அனைத்தும் இவ்வாறு கூறப்படுகின்றது. ஆகவே சட்டப்பூர்வமான விவாதத்தை முன் வைக்க தீர்மானித்துள்ளோம். இரு நாள் விவாதம். இது குறித்து கலந்துரையாடுவோம்.