சூறாவளி
வில்பத்து பிரச்சினை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு, கட்சிக்கும் ஆதரவாக பத்திரிகையிலும், இணையத்தளங்களிலும், முகநூல் பக்கத்திலும் எழுதிய நண்பர்களுக்கும் மு.காவின் தலைவருக்குமிடையிலான முக்கிய சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை மு.காவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் மு.காவின் தலைவர் ஹக்கீம் கூறுகையில்,
மு.காவின் எதிர்கால வளர்ச்சிக்கும், இக்கட்சியைப் பற்றி யாராவது பிழையாக பத்திரிகையிலோ அல்லது இணையங்களிலோ அல்லது முகநூல் பக்கமாக கருத்துத் தெரிவித்தால் நீங்கள் அதற்கு தகுந்த பதில்களை வழங்கி வைக்கவேண்டும்.
தற்போதைய காலத்தின் தேவையாக முகநூல் பக்கம் மிக பெறுமதி வாய்ந்த ஒரு பாரிய ஊடகமாக இன்று உலகில் உலா வந்துகொண்டிருக்கின்றது. இதன் மூலம்தான் மு.காவின் கட்சியையும், அதன் தலைமையையும் பாதுகாக்கவேண்டிய கடமைப்பாடு இங்கு வந்திருக்கும் உங்களுக்கு பெறும் பங்குள்ளது என்று மு.காவின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சுமார் 20 ஊடகவியலாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபா வீதம் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.