தரம் ஒன்றுக்கு மாணவர் அனுமதி ஜூலை 10க்கு முன்னர் விண்ணப்பிக்கவும்!

 

Unknown2016 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்களை  ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்கு முன் பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அரசியல் வாதிகள் தாம் விரும்பிய பிள்ளைகளின் பெயர் பட்டியல்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். 

தேசிய மற்றும் மாகாண மட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் பலர் கடந்த காலத்தில் தம்முடன் நெருங்கிப் பழகுவோரின் பிள்ளைகளை சட்டவிரோதமாக பாடசாலைகளில் சேர்த்துள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இதனால் உரிய தகைமைகளை பூர்த்தி செய்யாத பிள்ளைகளும் பாடசாலைகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலைகளில் தரம் ஒன்றில் சேர்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே தமது கொள்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.