கல்முனை சாஹிறா கல்லூரியின் சாரணிய வலுவூட்டும் அமைப்பு

 

-எம்.வை.அமீர்,எம்.எம்.ஜபீர்-

சாரணிய பணியில் பல்வேறு சாதனைகளைப்படைத்த கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய சாரணர்களால், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய சாரணர் அமைப்பு என்ற பெயரில் அமைப்பு ஒன்று 2015-04-14 ல் உதயமானது.

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின்  சாரணியபடை அணிக்கு  வலுவூட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் அங்குராப்பன ஒன்றுகூடல் ஜனாதிபதி விருது பெற்ற சாரணர் ஏ.எம்.எம்.டில்சாத் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு அதிதிகள் வரிசையில் ஜனாதிபதி விருது பெற்ற சாரணரும் கிழக்குமாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பி.எம்.எம்.பதுர்தீன் , மாவட்ட சாரண ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீத், முன்னாள் மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின்  சாரணர் அணித்தலைவர் எம்.ஏ.சலாம், மாவட்ட சாரண உதவி ஆணையாளர் கே.எம்.தமீம்,ஏ.எம்.சித்தீக் போன்றவர்கள் பங்கு கொண்டதுடன் கடந்தகாலங்களில் ஜனாதிபதி விருதுகள்  பெற்ற சாரணர்களும் கலந்து, அவர்கள் சாரண பணியாற்றியதன் காரணமாக பெற்ற அனுபவங்களையும் அதனுடாக பெற்ற நன்மைகளையும் எடுத்துக்கூறினார்.

புதிய நிருவாகம் ஒன்றும் இங்கு தெரிவு செய்யப்பட்டது.

இதில் தலைவராக ஏ.எம்.எம்.டில்சாத் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக ஏ.ஆர்.எம்.இம்தியாஸ் அவர்களும் பொருளாளராக எம்.ஜே.எம்.ஜவாத் போன்றோர் தெரிவு செய்யப்பட்டனர்.

நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி விருது பெற்ற சாரணர்களான வி.எம்.ஆஷிக் மற்றும் எச்.எம்.எம்.ஹஸ்னி ஆகியோர் மேட்கொண்டிருன்தது குறிப்பிடத்தக்கது.
1 (2)
2 (2)