தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் பிரியாவிடை பெற்றார்!

 

1_Fotorஎம்.வை.அமீர்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூன்றாவது உபவேந்தராக தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில், பல்கலைக்கழக உபவேந்தர் காலப்பகுதியின் இரண்டு பதவிக்காலங்களுமாக மொத்தமாக ஆறு வருடங்களை பூர்த்தி செய்து கொண்டு வெளியேற இருக்கும் இவ்வேளையில் 2015-06-19 ல் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களால் பிரியாவிடையும் கௌரவமும் வழங்கப்பட்டது. 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அல்ஹாஜ் எச்.அப்துல் சத்தார் அவர்களது தலைமையில், புனித நோன்பு திறக்கும் நிகழ்வுடன் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த சேவை பாராட்டு மற்றும் பிரியாவிடை நிகழ்வில் பொறியல்பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன் அவர்கள் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களது காலத்தில் பல்கலைக்கழகம் கண்டுள்ள அபிவிருத்திகளையும் அவர் கௌரவிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் விளக்கினார்.

பதிவாளர் அல்ஹாஜ் எச்.அப்துல் சத்தார் அவர்களது தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலக முற்றலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பீடாதிபதிகள் உயர்நிர்வாக உத்தியோகத்தர்கள் விரிவுரையாளர்கள் கல்விசார உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் பங்குகொண்டிருந்தனர்.

கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

a_Fotor b_Fotor c_Fotor d_Fotor