மைத்திரி ,மகிந்த விசேட நேரடிச் சந்திப்பு விரைவில் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் விசேட நேரடிச் சந்திப்பொன்று விரைவில் நடத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. 

இன்று அல்லது நாளை இந்த விசேட சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

வேறு யாரது பிரசன்னமும் இன்றி இருவரும் தனித் தனியாக நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் பல்வேறு முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளது. 

இதேவேளை, மஹிந்தவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடாத போதிலும், பிரதமர் வேட்பாளராக மஹிந்தவை நியமிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார் என சுதந்திரக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் மைத்திரி – மஹிந்த சந்திப்பு முன்னெடுக்கப்படுமா என்பது சந்தேகமே என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.