ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 166 ரன்கள் எடுத்தது. முன்னதாக டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.