“Everyday Americans need a champion.
I want to be that champion.Hillary Rodham Clinton”
– Hilary Cllinton –
அமெரிக்கர்கள் கடுமையான பொருளாதார சூழலில் இருந்து மீண்டுள்ளனர். அதன் பயன் பரவலாக வேண்டும். ஆனால் அது மேல்தட்டு மக்களுக்கே இன்னும் சாதகமாக உள்ளது. அந்த பயனை பெறும் வலிமை உங்களுக்கு உள்ளது. ஏனெனில் குடும்பங்கள் வலிமையாக இருந்தால் தான் அமெரிக்கா வலிமையாகும். அதற்காகத் தான் நான் அதிபர் தேர்தலில் நிற்கிறேன். நாள்தோறும் அமெரிக்கர்களுக்கு உத்வேகத்தை அளிக்கக் கூடிய ஒரு வீரன் தேவை. அந்த வீரனாக நான் இருப்பேன். இது உங்கள் நேரம். எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2008ம் ஆண்டு ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் போட்டியில் ஒபாமாவிடம் தோல்வி அடைந்த ஹிலாரி ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் போட்டிக்கு தயாராகிறார். ஒபாமா அரசில் 2009 – 13வரை வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த ஹிலாரி இந்தியாவின் ஆதரவாளர். இவர் அமெரிக்க அதிபரானால் இந்தியாவுடனான நல்லுறவு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிலாரிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் இந்திய வம்சாவளியை சேர்ந்த லுசியானா கவர்னர் பாபி ஜிந்தாலும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் நிற்க விரும்புகிறார். இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஒட்டுமொத்த ஆதரவு ஹிலாரிக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.