தென் சூடான் ஜனாதிபதி ஓமர் அல்–பஷிர் தென் ஆபிரிக்காவிலிருந்து தனது தாய்நாட்டிற்குத் திரும்பிக்கொண்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் திங்கட்கிழமை தெரிவித்தது.
அந்நாட்டில் 2003 ஆம் ஆண்டு கிளர்ந்தெழுந்த மோதல்களின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் அவரைக் கைதுசெய்ய உத்தரவிடுவதா இல்லையா என்பது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்மானிக்கவிருந்த நிலையிலேயே அவர் தாய்நாடு திரும்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோதல்களில் 3,00,000 பேர் கொல்லப்பட்டதுடன் 2.5 மில்லியன் பேர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
அவர் தென் ஆபிரிக்க ஜொஹன்னஸ்பேர்க்கில் இடம்பெற்ற ஆபிரிக்க ஒன்றிய உச்சிமாநாமொன்றில் கலந்துகொண்டுவிட்டே தாய்நாடு திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
தென் ஆபிரிக்க நீதிமன்றமொன்று பஷிர் அந்நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டிருந்தது.
எனினும் அவரைக் கைதுசெய்து தடுத்துவைப்பதற்கான தீர்மானத்தை அது பிற்போட்டுள்ளது.