ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பை உடைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
அன்று நாம் ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு அஞ்சவில்லை, ரணசிங்க பிரேமதாசவிற்கு அஞ்சி ஒளிந்திருக்கவில்லை.
அவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்கவிற்கு அஞ்சுவோமா?
நாம் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்மொன்றை அமைப்போம். இது தான் மக்களின் தீர்மானம்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாட்டில் ஆட்சியை முன்னெடுக்க அனுபவம் போதாது. அவர்களினால் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சி ஓர் சீர்குலைந்த கட்சியாகும். கட்சிக்குள்ளேயே ஜனநாயகம் கிடையாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாட்டுக்கு மோசடி செய்யாத ஓர் கட்சியாகும் என அனுர பிரியதர்சன யாப்பா சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.