பிரதேசவாத குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட சாய்ந்தமருது குறுநில மன்னர்களின் அங்காடி அரசியலுக்காக சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகம் பயணிப்பது ஆரோக்கியமானதொன்றல்ல !

FB_IMG_1434458261468

  பிரதேசவாத குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட சாய்ந்தமருது குறுநில மன்னர்களின் அங்காடி அரசியலுக்காக இரத்த உறவுகளான கல்முனை சாய்ந்தமருது,மருதமுனை, நற்பட்டிமுனை  மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க  முற்படுபவர்களுக்குப் பின்னால் சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகம் பயணிப்பது ஆரோக்கியமானதொன்றல்ல என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஊடக பேச்சாளரும் அக்கட்சியின் கிழக்கு மாகாண சமூக பொருளாதார அபிவிருத்தி குழுத் தலைவருமான அஹமட் புர்கான் JP
தெரிவித்துள்ளார்.

  தேர்தல் கால சீசன் வியாபாரமாக மக்கள் மன்றத்தில் கொண்டு வரப்படுகின்ற கரையோர மாவட்ட கோரிக்கையை  போன்ற தொரு கண்கட்டி வித்தையான ஒன்றாகவே இந்த சாய்ந்தமருது பிரதேச சபை கோரிக்கையை அவதானிக்க முடிகின்றது. அரசியலில்   அடையாளம் இல்லாமல் காணாமல் போன கல்முனையின் முன்னால் மேயர் சிராஸ் மீராசாஹிப் அவர்கள்  அரசியலில்  தனக்கான இருப்பை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறான சித்த விளையாட்டு ஜால வார்த்தைகளுக்கு பின்னால் சாய்ந்தமருது கல்விமான்கள் புத்திஜீவிகள் பள்ளிவாயல் நிர்வாகம் வர்த்தக சங்கம் என நடுநிலை தவறாமல் சிந்தித்து  செயல்பட வேண்டியவர்கள் கண்மூடித்தனமாக இவருடன் பயணிப்பது வேதனையளிக்கின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன்னைநாள் உள்ளூராட்சி மற்றும் மகாணங்களுக்கு பொருப்பான அமைச்சராக இருந்த பா.உ அதாவுல்லாஹ் அவர்களினால் நாளை செய்து தரப்படும் நாளை மறுநாள் முடித்துத் தரப்படும் எனவும் சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி மன்றமாக வர்த்தமானியில் பிரகடனமாகும் என அன்று மஹிந்தவின் வெற்றிக்கு   வெருமனே பேசு பொருளாக மாத்திரம் அசைப்போட்டுவிட்டு  தேர்தல் முடிந்ததும் அக் கோரிக்கையும் மௌனித்து போனதையும் நாம் அறிந்ததே  இருப்பினும் தற்போது சில தினங்ககளில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்பதை அறிந்து தனக்கான அரசியல் அங்கிகாரத்துக்காக பிரதேச வாதத்துக்கு வித்திடும் இவ்வாறான செயலுக்கு சாய்ந்தமருது மக்கள் துணை போக வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

அவ்வாறு சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை அல்லது உள்ளூராட்சி அதிகாரம் வழங்கப்படுமானால் மருதமுனை நகருக்கும் அவ்வாறான உள்ளூராட்சி சபை வழங்கப்படல் வேண்டும். இவ்வாறு ஆளுக்கொரு பிரதேச சபையாக கல்முனை மாநகரம் துன்டாடப்பட்டால் இலங்கையின் வராலாற்றில் ஒரே ஒரு முஸ்லிம் மாநகர சபையும் இல்லாதொழிவதோடு எதிர்வரும் காலங்களில் இப்பிரிவினை வாதத்தால்
கல்முனை தொகுதிக்கான பாராளுமன்ற பிரநிதித்துவமும் இழக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை

எனவேதான் சுயபுத்தி அதிகமுள்ள சாய்ந்தமருது மக்கள்  அரசியல்வாதிகளின் கபடமான பசப்பு வார்த்தைகளை நம்பி சாய்ந்தமருதுக்கே உரித்தான கண்ணியத்தை இழக்காமல் இந்த விடயத்தில் காத்திரமான நடவடிக்கை எடுக்க ஊர் கல்விமான்கள், புத்திஜீவிகள் நடவடிக்கை  எடுப்பார்கள் என நம்புகின்றேன்.

மேலும்
15June2015  SLMC வெளிச்சம் என்ற இணையத்தில் வேளியான செய்தியில் எமது கட்சியான தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியும் இணைந்து தான் உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருதில் ஹர்த்தால் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கியது என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒரு தகவல் எனவும் சாய்ந்தமருது பிரதேச சபை பிரிப்புக்கு எமதுதேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஒருபோதும்  உடன்படவில்லை எனவும் தெரிவித்தா.