ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவை நியமிப்பதற்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்சவுக்கு பிறிதோர் கூட்டணியின் ஊடாக தேர்தலில் களமிறங்கினால் அவருக்கு போட்டியாக களமிறங்கக் கூடிய ஒருவர் சந்திரிகா குமாரணதுங்க எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு சந்திரிகா குமாரணதுங்க ஒருபோதும் மறுப்புத் தெரிவிக்கமாட்டார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்திரிகாவுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது