அபு அலா
அம்பாறை சம்புநகர் சுனாமி மீள்குடியேற்ற கிராம வீட்டத்திட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி வழங்கக்கோரி இன்று காலை செவ்வாய்க்கிழமை (16) கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம்.நஸீர் தலைமையில் திருகோணமலை முதலமைச்சர் காரியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ், சம்புநகர் மீள்குடியேற்ற சங்கத் தலைவர் ஏ.தஸ்லீம் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
ஹெல்ப் ஏஜ் அரச சார்பற்ற நிறுவனத்தினால் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் விஷேட தேவையுடைய 25 குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டும் இதுவரை காலமும் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படாமல் இருப்பதையிட்டு இந்த மீள் குடியேற்ற குடும்த்தினர் தங்களின் மகஜரை கையளித்தனர்.
தற்போதைய அரசின் 100 நாள் வேலைத்தின் கீழ் இக்குடும்பங்களின் செயற்பாட்டினை உள்வாங்கி குறிப்பிட்ட இந்த 25 குடும்பங்களின் காணி உறுதிப்பத்திரத்தை பெற்றுத்தருமாறும் குறிப்பிட்ட குடும்பத்திலுள்ளவர்கள் விஷேட தேவையுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.