100 நாட்கள் நிர்வாகத்துக்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர், அந்த நாட்களை 200ஆக நீடிப்பது மக்கள் ஆணைக்கு முரணானதாகும் !

ajith-p-perera

 நாடாளுமன்றத்தை விரைவாக கலைத்து பொது தேர்தலுக்கு செல்லுமாறு ஐக்கிய தேசியக்கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்துமூலமாக கோரியுள்ளது.  அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முடியாது.

 ஆகையால், நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்துபொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு நாம் கோரியுள்ளோம் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித். பி. பெரேரா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்,  100 நாட்கள் நிர்வாகத்துக்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அந்த நாட்களை 200ஆக நீடிப்பது மக்கள் ஆணைக்கு முரணானதாகும். இது மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.

 தற்போதைய அரசியல் சூழ்நிலைகளின் பிரகாரம் புதிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதற்கான 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றி கொள்வதற்கான சுற்;றுசூழல் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.