புது வருட கொள்வனவு!

a_Fotor
எம்.ஐ.எம்.றியாஸ்
  நாளை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இன்று அம்பாறை மாவட்டத்தில் பொருட்கள் கொள்வனவு செய்வதில் மக்கள் என்றும் இல்லாதவாறு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் கரையோரப்பிரதேசங்களில் என்றும் இல்லாதவாறு அளவுக்கதிகமான தற்காலிக கடைகளைகள் அமைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளன.
நிரந்தர மற்றும் தற்காலிக கடைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட் கொள்வனவில் ஈடுபட்டுபட்டுள்ளனர்.
புதிய நல்லாட்சியின் கீழ் பொருட்களின் விலைகள் குறைவாக காணப்படுவதாக இதன் போது நுகர்வோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சந்தோசமாக தமது புத்தாண்டு பண்டிகையை இம்முறை நல்லாச்சியின் மூலம் நிம்மதியாகவும்,மகிழ்ச்சியாகவும் கொண்டாடவுள்ளதாக என அரச உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
 d_Fotor
b_Fotor
e_Fotor
c_Fotor