முகம்மது இனாயத்துல்லாஹ் இபாஸா என்னும் முஸ்லிம் மாணவி தற்போது மொறட்டுவை பல்கலைகழகத்தில் முதலாம் வருட மாணவியாக Quantity Surveying (QS) பட்ட படிப்பினை தொடர்கின்றார்.
இவருடைய தந்தை ஒரு கிராம சேவகர் (GS) ஆவார். தனது உயர் தர படிப்பை வெற்றிகரமாக முடித்த இவருக்கு பட்ட படிப்பை முடிப்பதற்கு முன் வல்ல இறைவனின் சோதனை அணைத்துவிட்டது. தனது இரண்டு காதுகளின் கேட்கும் திறனை இன்னும் சில நாட்களில் இழந்துவிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த இவருக்கு மருத்துவ உதவிக்கு போதுமான பணம் கிடைக்கவில்லை. ஆனால் லங்கா hospital இவருக்கு அவசரமாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கான செலவு 31 இலட்சம் எனவும் கணக்கிட்டுள்ளது .
இந்த இமாலய இலக்கை அடைந்து கொள்வதற்காக மொரட்டுவை பல்கலைகழக மாணவர்களால் பல திட்டங்கள் செயல்படுத்த பட்டுள்ளன. அதில் ஒரு அங்கமாக மொறட்டுவை பல்களைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர்களால் நிதி திரட்டும் திட்டமொன்று இப்படியான சமூக வலைத்தளங்களில் தொடரப்பட்டு வருகின்றது.
இதற்கான பணத்தை அவசரமாக திரட்ட வேண்டி இருப்பதால் அனைவரும் உங்களால் முடிந்த அளவு உதவிகளை அல்லாஹ்வின் அருளை நாடி செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
Account Details: