எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பாக எவ்வித ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் அதிகமான ஆசனங்களைப் பெறும் கட்சிக்கே பிரதமர் பதவி கிடைக்கப்பெறும். அதில் எவ்வித சந்தேகமும்
இல்லை என வும் ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்த அரசியல் கட்சி ஆட்சி அமைத்தாலும் அந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் இணைத்து கொள்ளப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.