எம்.வை.அமீர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் பாரிய குறையாக காணப்பட்ட நிருவாக கட்டிடத்தொகுதியின் தேவை உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக 2015-06-13 ல் பூர்த்தியானது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களின் அழைப்பின்பேரில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் திரு பீ.றணேபுர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து குறித்த கட்டிடத்தொகுதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
பழைய நெற்களஞ்சியசாலையின் ஒரு பகுதியாக காணப்பட்ட குறித்தகட்டிடம் சுமார் 105 மில்லியன் ரூபாய்கள் செலவில் லிப்ட் வசத்திகள் உள்ளடங்கலாக கட்டி முடிக்கப்பட்டிருந்தது.
நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் அவர்களும் பிரதிப்பதிவாளர்களான ஏ.சீ.ஏ.எம்.மன்சூர்,எம்.ஐ.நௌபர் உள்ளிட்ட நிருவாக உயர் அதிகாரிகளும் பிரயோக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் மற்றும் பீடாதிபதிகளான எம்.அப்துல் ஜப்பார், கலாநிதி குணபாலன்,எஸ்.எம்.எம்.மசாஹிர், கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன் உள்ளிட்டடோரும் பிரயோக விஞ்ஞான பீடத்தின் திணைக்களத் தலைவர்களான ஏ.நஸீர் அஹமட், கலாநிதி யூ.எல்.செயினுடீன்,கலாநிதி எச்.எம்.எம்.நளீர் உள்ளிட்டவர்களும் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் ஐ.எல்.தஸ்லிம் மற்றும் உயர் நிருவாக உத்தியோகத்தர்கள் விரிவுரையாளர்கள் கல்விசார உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என அநேகர் பங்கு கொண்டிருந்தனர்.