இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் – பிரதமர் மோடி ஜெர்மனிக்கு அழைப்பு!

B2hSGFuCYAAMqhT

எங்களின் விலை மதிப்பு மிக்க நாடு ஜெர்மன், இந்தியாவில் முதலீடு செய்ய ஜெர்மனியை அழைக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அரசுமுறைப்பயணமக பிரான்ஸ், ஜெர்மன் , கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் சென்று அந்நாட்டு பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.பின்னர் ஜெர்மன் சென்ற மோடி, ஹானேவரில் நடந்த வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார்.

இதில் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெல், ஹானேவர் நகர மேயர் மற்றும் ஜெர்மன் தொழில்வல்லுனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, எங்களின் (இந்தியாவின் ) மதிப்புமிக்க நாடு ஜெர்மன். இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்துவதே மேக் இந்தியாவின் நோக்கம் , வெறும் வார்த்தைகள் அல்ல மேக் இந்தியா. அது ஒரு தேசிய இயக்கம். எனவே இந்தியாவில் முதலீடு செய்ய ஜெர்மனியை அழைக்கிறேன்.இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. நமது பலத்தில் தான் நமது கவனத்தை அதிகரிக்க வேண்டும். தேவையற்ற விதிமுறைகள் நீக்கவிட்டு, எளிமையான நடைமுறைகள் உருவாக்கப்படுகின்றன. இந்தியாவில் தொழில்துவங்குவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்படும். மேக் இன் இந்தியா திட்டத்தில் நீங்களும் பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.

இந்தியாவுக்காகவும், உலகத்திற்காகவும் நீங்கள் இந்தியா வந்து தொழில் துவங்க வேண்டும் என்றார்.

B2hSGFuCYAAMqhT