
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே அவர் இதைத் தெரிவித்ததாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு செப்டெம்பரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் போது, நியூயோர்க்கில் வைத்து ஜனாதிபதியைச் சந்திக்க ஆவலமாக உள்ளதாகவும் பான் கீ மூன் இதன்போது தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், அமைச்சின் பேச்சாளர் திருமதி மஹிஷினி கொலன்னே மேற்கண்டவாறு தெரிவித்தார்.