கலைமகன்
காரைதீவு பிரதேச செயலகதின் அதிகார எல்லையில் மாளிகைக்காடு பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக இயங்கிவரும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் மாதாந்த அமர்வு சில தினங்களுக்கு முன்னர் மாளிகைக்காடு பல் தேவை கட்டிடத்தில் இடம்பெற்றது.சங்க தலைவி ச.பாஹிதா தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வில் சங்கத்தின் முக்கியஸ்தர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த மாதர் சங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த சிம்ஸ் பல்கலை கழக பணிப்பாளர் நாயகமும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விடையங்களுக்கான பணிப்பாளருமான அன்வர் எம் முஸ்தபா கலந்து கொண்டிருந்தார்.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இவர்.
இந்த அமைப்பானது கடந்த பல வருடங்களாக சிறப்பாக இயங்கி வருவதாகவும் இந்த அமைப்பின் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆசைகொண்டிருப்பதாகவும் கூரினார்.தொடர்ந்தும் உங்கள் வாக்குகளை சூரையாடும் நோக்கில் உங்களுக்கு அரிசி,காசி,தண்ணிர் ,மின்சார இணைப்புக்களை வழங்கும் இவர்களை நம்பி நீங்கள் உங்கள் வாக்குகளை வழங்கியதன் பின்னர் இவர்கள் உங்கள் பிரதேசதிட்கு செய்த சேவைகளை உங்களால் கூர முடியுமா? நிச்சயமாக இல்லை . சுமார் 1,2 கோடிகளை கொட்டி வாக்கு வேட்டையில் ஈடுபடும் இவர்கள் வெற்றி பெற்றபின்னர் அதனை எவ்வாறு பல மடங்காக சம்பாதிக்கலாம் என்பதையே குறிக்கோளாக வைத்திருப்பர் .அவர்களால் எப்படி உங்களுக்கு சேவை செய்ய முடியும்.இந்த நிலை மாறி புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க உங்களால் முடியும் எனவும் கடந்த காலங்களில் சந்திரிக்கா அம்மையார் இந்த நாட்டை ஆட்சி செய்த போது இருந்த நிலை இப்போது படிப்படியாக மீண்டு வர ஆரம்பித்துள்ள நிலையில் மகளிர் சக்தியை கொண்டு மக்களுக்கு நல்லது செய்யும்
தலைமைகளை ஆதரித்து மக்கள் நலனில் அக்கறையுடன் செயற்படும் எமது கட்சிக்கு நீங்கள் பலமாக அமைய வேண்டும் எனவும் இரத்தங்களை சூடாக்கி இன ரீதியாக பங்கம் விளைவித்து பகட்டு அரசியல் செய்யும் கட்சிகளை துரத்தும் காலம் நெருங்குகிறதுஎனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கு உரையாற்றிய சங்க தலைவி கடந்த கால இனக்கலவரங்களின் போதும் தமது உயிரை துட்சமாக மதித்து நேரடியாக இந்த சமுகத்திற்காக போராடியது போல அண்மைய காலங்களில் பேரின சக்திகள் நமது சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விட்ட கலவரங்களில் எமது முஸ்லிம் தலைமைகள் மௌனமாக இருந்த போது அச்சப்படாமல் பல விவாதங்களில் தோன்றி எமது சமூகத்திற்கு குரல் கொடுக்கும் நீங்கள் இலைமறை காயாக பல சேவைகள் செய்தும் மௌனமாக நீங்கள் செய்து வரும் இந்த கல்வி சேவை பாராட்ட தக்கதே எனவும் தெரிவித்தார்.மேலும் உங்களை போன்ற சிறந்த கல்வித்தகமையும், சேவை செய்யும் ஆற்றலும் உள்ள வர்கள் நேரடியாக அரசியலுக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் இந்த சங்கம் உங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும் பூரண ஆதரவை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.