தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயலுக்குள் சப்பாத்துக் காலோடு நுழைந்து பள்ளியின் புனிதத்தை கெடுத்து, அங்கிருந்த மக்களைத் தாக்கி அராஜகம் புரிந்த A.C மாதவன் மற்றும் போலிஸ் துணை ஆய்வாளர் அப்துல் காதர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று மாபெரும் “மக்கள் திரல்” ஆர்ப்பாட்டம் சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்றது.
பள்ளிவாயலின் புனிதம் காக்கும் விதமாக நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களும் திணரும் அளவுக்கு லட்சக் கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
குறித்த இரண்டு போலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு பதவி நீக்கம் செய்யப்படாவிட்டால் இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் விரிவு படுத்தப் போவதாக தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் அறிவித்தது.
எதிர்வரும் 16.06.2015 செவ்வாய்க் கிழமை வரை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அதற்குள் குறித்த இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பதை அரசு உணர்ந்து கொள்ளும் என்று தவ்ஹீத் ஜமாத்தின் மூத்த தலைவர் சகோ. பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.
காவல் துறையினரின் அராஜகத்தை தமிழகத்தில் ஆளும் ஜெயலலிதா அரசு கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருமா?