சாய்ந்தமருதுக்கு ஏன் இந்த துரோகம் – ஹுதாவின் கேள்விக்கு பதில் என்ன ?

 
 சாய்ந்தமருது மண்ணுக்கு முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ள கீழ்வரும் விடயங்களுக்கு யார் பொறுப்பு கூற போவது?   முதுகேன்புடன் மக்கள் தலைவர்கள் எனும் நாமம் சூட்டியவர்கள் பதில் தருவார்களா???? இல்லை புற முதுகு காட்டி ஓடுவதுக்கு ஒப்பாக மௌனம் காப்பார்களா? சாய்ந்தமருது மண்ணுக்கு  நீதி கிடைக்குமா என முன்னாள் நீதியமைச்சருக்கு  அல்  -மீசான் பௌண்டசன் தலைவரும் NDPHR இன் தேசிய கொள்கை பரப்பு செயலாளருமான அல் -ஹாஜ் ஹுதா உமர் கேள்வி எழுப்பினார் 
10299144_763311757034978_6502981236659023918_n
1. இரண்டு தடவைகள் மக்களால் தெரிவு செய்ய பட்டு கிழக்கு மாகாண சபைக்கு உறுப்பினராக அனுப்பப்பட்ட AM .ஜமீல் அவர்களுக்கு முதலாவது சபையிலும் ,இரண்டாவது தடவையிலும் எந்த அமைச்சுக்கலையும் வழங்காது ஏமாற்றி வந்த தலைமைத்துவம் முதலமைச்சர் பதவியை சாய்ந்தமருது மண்ணுக்கு தருவார் எனும் கனவுக்கு கடைசியில் பதிலாக ஆர்ப்பாட்டங்களே மிஞ்சியது ஜெமிளுக்கு முதலமைச்சரோ அல்லது அமைச்சு பதவிகளோ வழங்க படவில்லை காரணம் அவர் சாய்ந்தமருது என்பதனாலா? 
2.கடந்த கல்முனை மாநகர சபையில் சாய்ந்தமருது மகன் மேயராக வரவேண்டும் என்பதற்காக சிராஸ் மீராசாஹிப் எனும் நபருக்கு கட்சி பேதங்கள் மறந்தும் மக்கள் பலர் வாக்களித்து அதிக விருப்பு வாக்கில்  அவரை முன்னிலை படுத்தி மேயர் பதவியை கூட கூட்சலிட்டு ,ஆர்பாட்டம் நடத்தி எடுத்தும் உங்கள் கட்சியின் உறுப்பினர்களை பறிகொடுக்க நேரிடபோவதை உணர்ந்து அவரினால் செய்து வந்த சேவைகளை கூட பூர்த்தி யாக்க முடியாது 2 வருடங்களுடன் வீட்டுக்கு அனுப்பியது  அவர் கலாநிதியாக இருந்தும் தகுதி  இல்லாததாலா? சாய்ந்தமருது தகுதி இல்லாததாலா? கல்முனை மாநகர சபைக்கு அதிக வரி செழுத்தும் ஊர் என்பதாலா? அல்லது உங்கள் கட்சியின் கொள்கைகளில் ஒன்றான தூக்கத்தை அவர் கடைப்பிடிக்காமல் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ததனால?
3. தேசிய பட்டியலில் தெரிவான உங்கள் கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு இராஜாங்க அமைச்சர் பதவியை வழங்கி இறுதி நேரத்தில் சாய்ந்தமருது மக்களின் ஆசைக்கு ஆப்படித்தது ஏன்? பாரளுமன்றதிட்கு மக்கள் வாக்களித்து அனுப்பி வைத்த HM M  ஹரீசுக்கு இராஜாங்க அமைச்சர் பதவியை வழங்க முடியவில்லை  காரணம் அவர் சாய்ந்தமருது மண்ணில் வாழ்ந்து வருவதா? இல்லை உங்கள் கட்சியை விட சாய்ந்தமருது மக்கள் ஏளனமான போக்கை கொண்டவர்கள் என தோனுவதனாலா?
4. கடந்த  பொது தேர்தலின் பின்னர் உங்களை நம்பி வாக்களித்த சம்மாந்துறை மண்ணுக்கு அந்த தேசியபட்டியலை வழங்காது  செய்த துரோகதிட்கு பதில் என்ன?அரசியல்  சாணக்கியமா? அந்த  தொகுதியில்  மக்கள் ஒருவரை தெரிவு செய்திருந்தும்(கௌரவ பைசால் ஹாசீம் ) அந்த தொகுதிக்கு ஒரு சிறந்த அமைச்சர் இருக்கிறார் என்று தெரிந்தும் (கௌரவ அதாவுல்லாஹ் )அதே தொகுதிக்கு தேசிய பட்டியல்? ஏன்? சம்மாந்துறை மக்களும் சாய்ந்தமருது மக்கள் போல வோட் மிசின் என நினைத்ததாலா? இல்லை மக்களை விட கட்சியே பெரிது என எண்ணியதா ?
அப்போதைய உள்ளுராட்சி அமைச்சராக இருந்த கௌரவ அதாவுல்லாஹ் சாய்ந்தமருது நகர சபையை வழங்க எடுத்த முயற்சிகள் இறுதி கட்டத்தை அடைந்தபோது அதனை முஸ்லிம் காங்கிரஸ் தடுத்து நிறுத்தியதாக முஸ்லிம் காங்கிரசில் இருந்து அந்த கட்சியின் போக்கை நன்றாக அறிந்த அக்கட்சியின் சார்பில் மேயராகவும் இருந்த கலாநிதி சிராஸ் குற்றம் சாட்டினார்.
அந்த குற்ற  சாட்டை இந்த வினாடி வரை முஸ்லிம் காங்கிரஸ் மறுக்கவில்லை மௌனமாக இருக்கிறது.அப்படியாயின் மௌனம் சம்மததிட்கு அறிகுறியா?  நகர சபை வழங்க இந்த சாய்ந்தமருது மண் தகுதியானது என அரச உயரதிகாரிகள் சான்று பகிர்ந்தும் மாநகர முதல்வர் சான்று பகிர தாமதிப்பது ஏன்? அரசியல் வங்கரோத்து நிலையா? இல்லை என் மண்ணின் அபிவிருத்தி மீது கொண்ட கோபமா? 
அபிவிருத்தி  எங்களுடைய இலக்கு அல்ல மாறாக உரிமைகள் தான் எங்கள் இலக்கு என்று வைத்து கொண்டால் நீங்கள் அண்மைய காலத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் உரிமைகள் சார் பிரச்சினையில் தலையிடாமல் ராஜ மௌனம் காத்துவருவதை ஊமை தனம் என்பதா? இல்லை கோழைத்தனம் என்பதா?
உரிமைகள் இலக்கல்ல அபிவிருத்தி தான் இலக்கு என்றால் இந்த அரசினை கொண்டு சகல அமைச்சுக்களும் தமது மக்களுக்கு சேவை செய்து வருகிறது.நீங்கள் எனது மண்ணுக்கு செய்த அபிவிருத்தி என்ன? தோனாவை துப்பரவு செய்வது மாநகர சபையின் வேலை அதனை அபிவிருத்தியாக காட்டாதீர்கள்.
 100 நாளில் ஒரு நூலும் அசைக்க முடியாது போன மர்மம் என்ன? கடந்த அரசில் சுதந்திரம் இல்லை என்ற நீர் இப்போதும் அதே பல்லவியை பாடி மக்களை முட்டாள்களாக்க முனைவது வேடிக்கையே….   இந்த கேள்விகளுக்கான விடையை  உரிய பிரதேச மக்களின் மனதில் உள்ள கேள்விகளுக்கு விடையாக சம்பந்தப்பட்டவர்கள் தருவார்கள் என நம்புகிறேன் என நம்பிக்கையும் தெரிவித்தார்.