காலி அத்-தக்வா ஜும்ஆப் பள்ளிவாயலின் புதிய கட்டடத் திறப்பு விழா !

kovai.jpg2_
பழுலுல்லாஹ் பர்ஹான்
காலி மொறகொட என்ற பகுதியில் அமைந்துள்ள    அத்-தக்வா பள்ளிவாயல் சுமார் 14 வருட காலமாக பல மைல்கற்களைத் தாண்டி தனது தஃவாப் பணியை காலி மாநகருக்கு ஒளிச் சுடராய் ஒளிர்வித்துக்கொண்டு இருந்தது.
காலப்போக்கில் இட நெருக்கடிகளைச் சந்திக்கவே ‘அஷ்ஷ​பாப்’ நிறுவனம் முன்வந்து மிக விசாலமான ஒரே நேரத்தில் சுமார் 1000 பேர் தொழக்கூடிய ஓர் அழகான இரு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தை பள்ளிவாயலுக்கு அமைத்துத் தந்து அப்பள்ளிவாயலின் புதிய கட்டடம் 05.06.2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையூடன் மிக விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.
                                       சவூதி அரேபியா அல்-கஸீமைச் சேர்ந்த தனவந்தர் மர்{ஹம் ஸாலிஹ் முஹம்மத் அல் முஜைதீல் என்பவரின் நன்கொடையினாலேயே அது உருவமைக்கப்பட்டது.
அஷ்ஷெய்க் பத்{ஹர் ரஹ்மான் (பஹ்ஜி)யின் குத்பா பேருரை மற்றும் நிர்வாகத் தலைவர் அஷ்ஷெய்க் அதாஉல்லாஹ் (பஹ்ஜி)யின் வரவேற்புரையூடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இங்கு அஷ்ஷெய்க் மஸீர் (அப்பாஸி), அஷ்ஷெய்க் நில்பாத் (அப்பாஸி), அஷ்ஷெய்க் அன்ஸாரி ஹூகைபல் (பிர்தவ்ஸி) ஆகியோரின் உரைகள் நிகழ்ந்தன.
நிகழ்ச்சியின் இறுதியில் இந்தியாவின் கோவையைச் சேர்ந்த பிரபல பேச்சாளரான சகோதரர் கோவை எஸ்.ஐயூப்பின் கம்பீர உரையூம் இடம்பெற்றது.
மேற்படி திறப்பு விழாவிற்கு சவூதி அரேபியா அல்-கஸீமைச் சேர்ந்த மர்{ஹம் ஸாலிஹின் புதல்வர் அஷ்ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் அல் முஜைதிலும் அஷ்ஷ​பாப் நிறுவனத் தலைவர் அஷ்ஷெய்க் ரஷீத் முஹம்மது ச​ரீபும் வருகை தந்திருந்தமை குறிப்பிடக்கது.
kovai kovai.jpg2_.jpg3_ 7-IMG_2641