நாட்டை ஒழுக்க சீர்கேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறப்பானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்காக மத நல்வழிகாட்டல்கள் அவசியமாகுமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வாத்துவ சுனத்தாராம விஹாரையில் இரண்டு மாடி பிரிவெனா கட்டத்தை திறந்து வைத்த பின்னர் அங்கு இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
போதைவஸ்து பாவைனையோடு எமது சமூகத்தை ஆட்கொண்டுள்ள ஒழுக்க சீர்கேட்டை தடுப்பதற்கு சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.
இவ்விடயத்தில் நான் பின் நிற்கப்போவதில்லை. ஒழுக்கமுள்ள நாட்டை கட்டியெழுப்புவதற்கு மத வழிகாட்டல்கள்; அத்தியாவசியமானதாகும். அது மட்டுமல்லாது சட்டங்களும் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும், சட்டம் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
உலகின் சிறப்பான நாடாக எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கு பௌதீக வளங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதைப் போன்று ஒழுக்கமுள்ள சட்டத்தை மதிக்கும் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.
ஒழுக்கச் சீர்கேடான சமூகம் ஒருபோதும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.