யாழ்ப்பாணம் கொட்டடி கிராம அபிவிருத்தி சங்கமும் சனசமூக நிலையமும் மலையக கலை கலாச்சார சங்கமும் இணைந்து நடாத்தும் புத்தாண்டு விழா 2015 நேற்று (7) சனசமூக நிலைய கட்டட முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சனசமூக நிலையத்தின் தலைவர் நா.தனேந்திரன் தலைமை தாங்கியதுடன் இந்திய தூதரக துணைத் தலைவர் ஏ.நடராஜன் பிரதம விருந்தினராகவும்,சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ துறைப் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி,வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது சமூக திலகம் விருது 12 பேருக்கும்,ரத்தீன தீபம் விருது 21 பேருக்கும்,கலை கலாச்சாரம்,விளையாட்டு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களிற்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வை இரத்தீன தீபம் யாழ் மாவட்ட இணைப்பாளர் கலாபூசணம் எம்.எல் லாபீர் நெறிப்படுத்தி இருந்தார்.