ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணயச் சுழற்ச்சியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் விராட் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. பின்னர் 178 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.
இதனால் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
போட்டியின் நாயகனாக க்றிஸ் கெயில் தெரிவு செய்யப்பட்டார்.