மெக்கலத்தின் சத உதவியுடன் ஐதராபாத்தை வென்றது சென்னை

210369

 சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுபெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக மெக்கல்லம் சதம் அடித்து அசத்தினார்.

மெக்கல்லம் 56 பந்துகளில் 7 பவுணடரி, 9 சிக்சருடன் ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கேப்டன் டோனி 23 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் வார்னர் 53 ரன்கள் எடுத்தார்.