அரை இறுதி போட்டிக்கு தெரிவானது லிவெர்பூல்

Britain Soccer FA Cup

 இங்கிலாந்தின் நொக்அவுட் போட்டித்தொடரான எப்ஏயில் 1:0 என்ற கணக்கில் பிளக்பேர்ன் அணியை தோற்கடித்து லிவர்பூல் அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் பிலிப்பி கொத்தின்கோ பெற்ற ஒரேயொரு கோலின் மூலமே லிவர்பூல் அணி வெற்றிபெற்றது.

 லிவர்பூல் அணி அரையிறுதியில் வரும் ஏப்ரல் 19ஆம் திகதி ஆஸ்டன் வில்லாவை சந்திக்கவுள்ளது.