துரையூர் மிஸ்பாஹ் ஏ கரீம்
அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டவுடன் மு.காவின் தோல்வியும், அ.இ.ம.காவின் வெற்றியும் தெளிவாகும்.
ஏன் என கேட்கின்றீர்களா..?
மு.காவுக்குள்ள சவால் என்ன..?
இம் முறை அம்பாறை மாவட்டத்தில் மு.கா ஐ.ம.சக்தியுடன் இணைந்தே களமிறங்கவுள்ளது. 5 ஆசனங்கள் கிடைக்கும். இப்போதைக்கு ஹரீஸ், பைசால் காசிம், மன்சூர் ஆகிய மூவரை உறுதியாக சொல்லலாம். வேட்பாளர் லிஸ்டில் ஸிராஸ், தவம், உதுமாலெப்பை, வாஸித் ஆகிய நால்வர் உள்ளனர். இருவருக்கே வாய்ப்புள்ளது. எப்படியும் இருவருக்கு வாய்ப்பில்லை.
ஸிராஸுக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் என்ன நடக்கும்?
சாய்ந்தமருதில் அ.இ.ம.காவாறது சலீம் டீ.எஸ் மற்றும் றிஸ்லி முஸ்தபா ஆகிய பலமான இரு வேட்பாளர்களை களமிறக்கவுள்ளது. இந் நிலையில் சாய்ந்தமருதில் மு.காவின் சார்பில் யாரும் களமிறங்காது போனால், சாய்ந்தமருதின் வாக்கை மிக இலகுவாக, போட்டியின்றி அள்ளி எடுக்கும்.
தவத்துக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் என்ன நடக்கும்?
தவத்துக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் நிச்சயம் தவம் வேறு வழி செல்வார். ஜனாஸா எரிப்புக்கு துணைபோன இரண்டு பா.உறுப்பினர்களுக்கு எதிராக பாரிய பிரச்சாரத்தை முன்னெடுப்பார். இது மு.காவின் வாக்கு வக்கியில் பாரிய தாக்கத்தை செலுத்தும்.
உதுமாலெப்பைக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் என்ன நடக்கும்?
மு.காவின் பிரதான வாக்கு வங்கியை கொண்ட ஊர் அட்டாளைச்சேனையாகும். அட்டாளைச்சேனை மக்கள் பா.உறுப்புருமையை பெற வேண்டும் என பாரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர். உதுமாலெப்பைக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் அட்டாளைச்சேனை மக்கள் மு.காவை வெறுக்கும் நிலை உருவாகும். இதனை அ.இ.ம.கா சாதகமாகவும் பயன்படுத்த முனையும். இது எவ்வாறானதென்றால், ” வயிற்றிலுள்ள பிள்ளையை நம்பி, வெளியில் உள்ள பிள்ளையை அடித்து, சாகவைத்த கதையாகிவிடும்.”
வாஸித்துக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் என்ன நடக்கும்?
இம்முறை பொத்துவிலில் முஷார்ரபின் ஆட்டமிருக்கும். இம் முறை வேட்பாளரை களமிறக்காது மு.கா பொத்துவில் பக்கமும் செல்ல முடியாது. இம் முறை வேட்பாளரை களமிறக்காது போனால், இதன் பிறகு பொத்துவிலை மு.கா கை கழுவிய நிலையே ஏற்படும். அம்பாறை மாவட்டத்தில் மு.கா தேர்தல் அக்கறைப்பற்றோடு நிறுத்தப்படும். இது மு.காவுக்கு மிக ஆபத்தானது.
எப்படியும் இவர்கள் நால்வரில் இருவருக்கே வாய்ப்பு, இருவருக்கு வெட்டு நிச்சயம். வெட்டுபடும் இருவராலும் மு.கா பாரிய சவாலை எதிர்கொள்ளும். சான் ஏற, முழம் சறுக்கும் என்பார்கள் அல்லவா. அதுவே இங்கு நிகழப்போகிறது.