மதீச பதிராணாவின் காயம் காரணமாக முஹம்மட் ஷிராஸ் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்கான இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முஹம்மட் ஷிராஸ் இதுவரை 47 முதல் தர ஆட்டங்களில் விளையாடி 80 விக்கெட்டுகளை 17.52 சராசரியில் கைப்பற்றியுள்ளார்.
நேற்று (ஜூலை 30) BRC அணி சார்பாக பங்குபற்றி குருநாகல் YCC அணிக்கு எதிராக 21 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் முதற்தர போட்டிகளில் தனது சிறந்த பந்து வீச்சு பிரதியை பதிவு செய்தார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் கொழும்பு R. பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது .