அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் , இரண்டாம் முறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்த சிறிது நேரத்திற்குப் பிறகு, அவருக்கு எதிராக தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “வஞ்சகன் பைடன் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவன் ” என்று தெரிவித்துள்ளார் .
மேலும் துணை அதிபர் கமலா ஹாரிஸைப் நவம்பர் தேர்தலில் “சுலபமாக தோற்கடிக்க முடியும்” என்கின்றார் ட்ரம்ப்
“அவரது மருத்துவர் மற்றும் ஊடகவியலார்கள் உள்பட அவரைச் சுற்றியுள்ள அனைவரும் அவர் அதிபராக இருக்கத் தகுதியற்றவர் என்பதைத் தெரிந்திருந்தார்கள். .
“அவர் அதிபராகிய காரணத்தினால் நாம் மிகுந்த துன்பங்களை அனுபவித்தோம் , ஆனால் அவர் ஏற்படுத்திய சேதத்தை நாம் மிகவும் விரைவாகச் சரிசெய்வோம். அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றுவோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.