IMF திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது

IMF திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது எனவும், இந்த நோக்கத்தை அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும்.

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி நாட்டை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

CPC, ஶ்ரீலங்கன், CEB ஆகியன நாட்டின் வளங்களை ஏற்கனவே அதிகளவில் வீணடித்துள்ளன. அவற்றுக்காக அன்றி, வறியவர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு என்பவற்றுக்காகவே பணம் தேவைப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.