கிரீஸ் நாட்டில் எதிர்வரும் மே 21ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான கிரீஸில் வலதுசாரி கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சி உள்ளது.
அக்கட்சியின் தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் உள்ளார்.
முன்னாள் பிரதமர் கான்ஸ்டான்டைன் மிட்சோடாகிஸின் மகன் இவர். கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமராக பதவியேற்றது முதல் இவரது ஆட்சி மீது மக்களுக்கு நன்மதிப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.