இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிப் பொதியின் அங்கீகாரத்தை அமெரிக்கா, வரவேற்றுள்ளது.
இந்நிலையில் நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு தீர்வு காணும் கட்டமைப்பு மற்றும் நீடித்த சீர்திருத்தங்கள் இலங்கைக்கு தற்போது தேவை என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், நேற்று டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது சிறந்த செய்தி மற்றும் பொருளாதார மீட்சிக்கான பாதையில் ஒரு முக்கியமான படியாகும். இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும் மற்றும் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை முடிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அனைத்து குடிமக்களும் மேம்படுவதை உறுதி செய்வதற்கு நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையைக் குறிக்கும் கட்டமைப்பு மற்றும் நீடித்த சீர்திருத்தங்கள் முக்கியமானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.