புரோடீன் உணவின் முக்கியத்துவம்

உடல் இயக்கத்தில், புரோட்டீன்களின் பங்கு மிக முக்கியமானது. அதேபோல உடல் ஆரோக்கியத்திற்கும், புரோட்டீன் அவசியமான ஒன்று. 

 புரோட்டீன் என்றால் என்ன?
நம் உடலுக்குத் தேவையான சத்துக்களில் முதன்மையானது புரோட்டீன். இது `புரோட்டிலோஸ்’ என்ற கிரேக்க மொழி வார்த்தையில் இருந்து வந்தது. இதன் அர்த்தம், ‘அடிப்படை’ அல்லது ‘முதல் இடம்’. 1883-ம் ஆண்டில்தான் புரோட்டீன் என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. நமது உணவை சமநிலைப்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பது இந்த சத்துதான். சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 56 கிராம் புரோட்டீன் தேவை..

 புரோட்டீன் நிறைந்த உணவுகள் இறைச்சி, மீன், முட்டை, சீஸ், பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்கள், சோயா பீன்ஸ், பட்டாணி, துவரம் பருப்பு, பாதாம் பருப்பு, முந்திரி, பாதாம் நெய், சோயா பால், கோதுமை ரொட்டி, பசலைக்கீரை, சூரியகாந்தி விதை… இதில் அதீத புரோட்டீன் நிறைந்திருக்கும்.