முதலமைச்சர் ஊடகப்பிரிவு
இன்று (03) கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்றின் பெர்ணாண்டோவை சந்தித்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் கிழக்கு மாகாணப்பிரச்சனைகள், கல்வி நடவடிக்கைகள், ஆளணிப்பற்றாக்குறை, பட்டதாரிகளுக்கான நியமனங்கள், தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் என பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.
அதன்போது ஆளுணரால் முதலமைச்சரின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவசர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன் முதல் நடவடிக்கையாக பயிற்சி முடித்து கிழக்கில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் அவரவர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான நியமனங்கள்..
அம்பாரை, மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர் வரும் வெள்ளிக்கிழமை 05ஆம் திகதி மாலை 2.30 மணிக்கு மட்டக்களப்பு பிரதான வீதியில் இருக்கும் மஹஜன கல்லூரியிலும்..
திருகோணமலை மாவட்ட ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை 06ஆம் திகதி காலை 09.00 மணிக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிமணையிலும் நியமனங்கள் வழங்கப்படவிருக்கிறன.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதியாக கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.