இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்த நிதி வசதி வழங்கப்படுவதாக உலக வங்கியுடன் இணைந்த IFC நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள 03 முக்கிய வணிக வங்கிகளுக்கு இந்த தொகை வழங்கப்படும் என IFC நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை எதிர்நோக்கும் கடுமையான அந்நிய செலாவணி பற்றாக்குறையை தீர்ப்பதற்குத் தேவையான பலத்தை வழங்கும் நோக்கில் இந்த நிதி வசதி வழங்கப்படுவதாக உலக வங்கியுடன் இணைந்த IFC நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.