தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை நீக்கி புதிய பிரதமராக மீண்டும் மகிந்த ராஜபக்சவை கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், தமது உறுப்பினர்களிடம் ஆதரவு கோரியதாக சுதந்திர மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதற்காக ஆளுங்கட்சியிலுள்ள பலர் தமது ஆதரவுகளை கோரியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை மாற்றுவதற்கான திட்டங்களை ஆளுங்கட்சியில் உள்ள சிலர் தமக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.
பிரதமர் பதவியை மாற்றுவதால் மாத்திரம் இந்த நாட்டின் பிரச்சனை தீரப்போவதில்லை, முழு அரசாங்கமும் வீட்டிற்கு செல்ல வேண்டும், அப்போதுதான் பிரச்சனைக்கு தீர்வு வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறினார்.